மேலும்

கொழும்பில் கடலை நிரப்பி 85 ஏக்கரில் கடற்கரைப் பூங்கா

கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெகிவளை வரை, கடலை நிரப்பி, கடற்கரைப் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. 300 மில்லியன் டொலர் செலவில் இந்தத் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். 

அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்காவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு நேற்றிரவு – தனது குடும்பத்தினருடன் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் சிறிலங்கா இராணுவம் மூடப் போவதில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு

காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது.

கோத்தாவைச் சந்திக்க மறுத்தார் விக்னேஸ்வரன்

வடக்கில் சிறிலங்கா இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்க தான் விரும்பிய போதும் அவர் மறுத்து விட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

மத்தல விமான நிலையத்துக்காக 325 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது இந்தியா

மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை கொள்வனவு செய்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து-  இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை அதனை கூட்டு முயற்சியாக  இயக்கவுள்ளது.

யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை சிறிலங்கா இராணுவம் உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக, மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.

‘அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்; தமிழர்களும் எனக்கு வாக்களிப்பார்கள்’ – என்கிறார் கோத்தா

அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

இத்தாலி, ஜோர்ஜியாவுக்குப் பயணமானார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இத்தாலி மற்றும் ஜோர்ஜியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.