மேலும்

ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு

ரஷ்யாவின் இராணுவ நிலப்பரப்பு ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த?

சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

மகிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சர்களும், பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்படுவதற்குத் இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

மகிந்த தரப்புக்கு சுமந்திரன் எச்சரிக்கை

ஐதேகவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு செய்திருப்பதாக தொடர்ந்தும்  குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், சிறிலங்கா பொதுஜன முன்னணி, தமக்கு வழங்க முன்வந்த வாக்குறுதிகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ரணில் ஆட்சியமைக்க சிறிலங்கா அதிபர் ‘பச்சைக்கொடி’?

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும்,  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற அரசாங்கத்தை உருவாக்கி தொடருவதற்கு அவர் அனுமதிப்பார் என்றும், அதிபர் ஊடகப் பிரிவின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் அவசர கூட்டம் – ரணிலை நியமிக்க மறுப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு – இவர்களின் கருத்து

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசியதழ் அறிவிப்பு, சட்டவிரோதமானது என்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு அரசியலமைப்புக்கு, எதிரானது, என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.