மேலும்

மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

113 பேரின் சத்தியக் கடதாசிகளுடன் மைத்திரியை இன்று காலை சந்திக்கிறது ஐதேக

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் சந்திக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

இன்று காலை முடிவு செய்கிறார் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், நாடாளுமன்றக் குழு இன்று  காலை 11 மணியளவில் கூடவுள்ளது.

இரவிரவாக கட்சிகள் ஆலோசனை

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று மாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர், இரண்டு பிரதான கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்றிரவு கூடி ஆராய்ந்துள்ளனர்.

புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட-  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்,  க.வி.விக்னேஸ்வரன்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வெற்றிக் கொண்டாட்டம் – கேக் வெட்டிய மகிந்த

சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நேற்றிரவு அதிபர் செயலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

பதவி விலகுவதற்கு நிபந்தனை விதித்த மகிந்த

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு, மகிந்த ராஜபக்ச, நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளார்.

ரணிலை அலட்சியம் செய்த மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அதிபர் செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம் – ஐதேக

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு  மீண்டும் கூடும் போது, தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

குரல் வாக்கெடுப்பை ஏற்கமுடியாது – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.