மேலும்

“நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம்“- அனுரவுக்கு மோடி கடிதம்

பேரிடரைத் தொடர்ந்து சிறிலங்காவின் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பண்டிகைக்கால பாதுகாப்பு- சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்

பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எல்லா நேரங்களிலும் சீனா உதவும்- அனுரவுக்கு வாக்குறுதி

எல்லா நேரங்களிலும்  சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் தெரிவித்துள்ளார்.

தொடர் சந்திப்புக்களை அடுத்து புதுடெல்லிக்கு புறப்பட்டார் ஜெய்சங்கர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடர் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு  புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

450 மில்லியன் டொலர் பேரிடர் உதவிப் பொதியை அறிவித்தார் ஜெய்சங்கர்

சிறிலங்காவுக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

சீனாவின் உயர்மட்டக் குழு இன்று சிறிலங்கா வருகிறது

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

என்பிபியின் வசமுள்ள கொழும்பு மாநகரசபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, 3 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

டிட்வா புயலினால் சிறிலங்காவுக்கு 4.1 பில்லியன் டொலர்கள் நேரடி சேதம்

சிறிலங்காவைத்  தாக்கிய டிட்வா புயல்,  4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு (GRADE) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.